பனை விதை நடவு குறித்து விழிப்புணர்வு

அரியாங்குப்பம்: பனை விதை நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரி டெபுள் சொசைட்டி சார்பில், கடற்கரை பகுதி, ஆறு மற்றும் நீர் நிலை பகுதிகளில் பனைவிதை நடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இடையார்பாளையம் பாரடைஸ் கடற்கரை பகுதியில் பனை விதை நடப்பட்டது. தொடர்ந்து, பனை விதை நடுவதால், ஏற்படும் நன்மைகள் குறித்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தனசுந்தரம்பாள் சாரி டெபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஆனந்தராஜ், விஜயலட்சுமி உட்பட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement