ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் ; மிரட்டுகிறது ஈரான்
டெஹ்ரான்: தங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைக்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நீடித்து கொண்டே வரும் நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிகளை அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் ஒரு மாகாணமாக அறிவித்து ஈரானை வெறுப்பேற்றி வருகிறார்.
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்று ஈரான் கூறியிருந்தது.
இந்த நிலையில், ஹார்முஸில் விதிகளை மீறிச் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு ஈரான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி பயணிக்கும் சரக்கு கப்பல்களின் எதிர்கால பயணங்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கப்பலை சிறைபிடிக்கவோ நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே, தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு பிற நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை செயலர் ரெஷாய் தெரிவித்துள்ளார்.
திராவிட அல்லது வெற்றி ஆட்சியாளர்கள் ஈரானுக்குள்ளும் புகுந்து விட்டார்களா? இல்லை இவர்கள்தான் எப்போதும் ஒரு செங்கலைக் கூட வைக்க விட மாட்டோம், சொட்டுத் தண்ணீர் தராத கர்நாடகாவை சும்மா விட மாட்டோம், குன்றுமணி இடத்தைக் கூட விட்டுத் தர மாட்டோம் என வழக்கமாக வெறும் சவால் விடுவார்கள். இப்போது அதே வார்த்தைகளை ஈரானிடமும் கேட்க நேர்கிறதே?
என்ன செய்தாலும் அமெரிக்காவுக்கு தான் லாபம்.
Oil டாலர் trading இல் தான் அதிகம் உள்ளது.
கடந்த 5 மாதங்களில் oil வியாபாரம் நல்ல லாபம் கூடுகிறது.
அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எறியும்
ஈரான் அழிக்கப்படும்வரை உலகில் அமைதி திரும்பாது
இந்தியன் பெயரிலுள்ள இஸ்ரேலிய அகதி
நீ யாரு Be indian live pakisthani தான ? இரான் ஒரு இஸ்லாமிய தீவிரவாத சர்வாதிகார நாடு . ஜனநாயக நாடு இல்லை அதை ஆதரிக்கும்போதே நீ யார் என்று தெரியுதுமேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு