'நிட் ஷோ' கண்காட்சி நிறைவு; ரூ.440 கோடி வர்த்தக விசாரணை
திருப்பூர்: திருப்பூரில் 3 நாட்களாக நடந்த 24வது 'நிட்ஷோ' கண்காட்சியில், கிட்டத்தட்ட 440 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.
பின்னலாடை தொழிலில் பயன்படுத்தப்படும் நிட்டிங், எம்ப்ராய்டரிங், பிரின்டிங், ஆடை வடிவமைப்பு இயந்திரங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. ஜப்பான், கொரியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இயந்திரங்களை காட்சிப்படுத்தின. இயந்திரங்களில், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் 'ஏ.ஐ' தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டிருந்தது.
உற்பத்தி திறனை மேம்படுத்த முயன்று வரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தினர், 'ஏ.ஐ' இயந்திரங்களில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வர்த்தக விசாரணை நடந்ததாக, ஸ்டால் அமைத்த நிறுவனங்கள் தெரிவித்தன.
கண்காட்சி அமைப்பாளர் கிருஷ்ணா கூறுகையில், “3 நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர். நிட்டிங், பிரின்டிங் இயந்திரங்கள் விற்பனையும் நடந்தது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு விசாரணை அதிகரித்துள்ளது,” என்றார்.
மேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு