இயக்குநர் பதவியில் ஐ.எப்.எஸ்.,கள்: பா.ம.க., எதிர்ப்பு

1

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

தமிழகத்தில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்களாக, ஐ.எப்.எஸ்., எனும் இந்திய வனப்பணி அலுவலர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'குரூப் - 1' தேர்வு வழியே ஊரக வளர்ச்சி துறைக்கு நேரடியாக உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் ஊரக வளர்ச்சி துறையில், இணை இயக்குநர் நிலைக்கு உயரும்போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக நியமிக்கப்படலாம்.

ஆனால் இப்போது, இந்திய வனப்பணி அதிகாரிகளை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்களாக நியமிப்பது, ஊரகப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகவே அமையும்.எனவே, இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

அதற்கு மாற்றாக, திட்ட இயக்குநர் பதவியை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழியே வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement