தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு
சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தயார் செய்யப்படும் தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக மாநிலத்தில் 107 மையங்களில், அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்குகிறது; இந்த திட்டத்தில் தயார் செய்யப்படும் தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக மாநிலத்தில் 107 மையங்களில், அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில், செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னதாகவே பாதுகாப்பு பெட்டகம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித் துறையைச் சுகாதாரத் துறைச் செயலாளர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
தங்க மோதிரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எஃகு அலமாரிகளைச் சுற்றி எஃகு கம்பி வலை அமைப்புகள், தரை மற்றும் சுவருடன் உறுதியாகப் பொருத்தப்பட்ட அலமாரிகள் மற்றும் பூட்டக்கூடிய கதவுகள் ஆகியவற்றை தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
3 பக்கங்களிலும் கட்டடங்களால் சூழப்பட்ட பாதுகாப்பான சேமிப்பு அறை, மூடப்பட்ட ஜன்னல்கள் மற்றும் சிமெண்ட், கான்கிரீட் மூலம் தரை மற்றும் சுவருடன் உறுதியாகப் பொருத்தப்பட்ட அலமாரி ஆகியவை அடங்கும். அலமாரியின் மேற்பகுதி மற்றும் இரு பக்கங்களை மூடியிருக்கும்.
முன்புறத்தில் திறக்கக்கூடிய வகையிலான 'மைல்ட் ஸ்டீல்' கம்பி வலைக் கதவு அமைக்கப்பட்டிருக்கும். தங்க மோதிரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இத்திட்டத்தைச் தடையின்றிச் செயல்படுத்தவும், இப்பணியை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விரைவாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு, அனைத்து மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டது. 107 மையங்களில் இருந்து, அரசு மருத்துவமனையில் பிறக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு பச்சிளம் குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
இந்த மோதிரத்திற்கு பதில் அந்த குழந்தைகளுக்கு மோதிரத்திற்கு நிகரான பணம் வங்கியில் முதலீடு செய்தால் அது அவர்களுக்கு உதவும்.
அல்லது 2 கிராம் தங்க டாலர் கொடுத்தால் அவர்களுக்கு பிரயஜோனமாக இருக்கும். மாவட்ட தலைநகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் குறைந்த செலவில் பாதுகாப்பாக வைக்க முடியும்.
வீண் செலவுகள் தவிர்க்க வேண்டும்
இந்த 17 இடத்திலேயும் இருக்கும் வங்கிகளில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கலாமே.
தங்க மோதிரம் பாதுகாக்க பேங்கில் உள்ள ஸ்ட்ராங் ரூம் போன்று அமைக்க வேண்டும். 24 மணி நேரம் பாதுகாப்பு. இன்சூரன்ஸ் பிரிமியம் போன்ற பல செலவுகள். அருகில் உள்ள வங்கி லாக்கர் வாடகைக்கு எடுத்து செலவினங்களை குறைக்க முடியுமா என்று யோசிக்கவும்.
அறுவடை நெல்லை பாதுகாக்க கிடங்குகள் பற்றாக்குறை. ஆனா இதற்கெல்லாம் பாதுகாப்பு அறை கட்ட நிதியிருக்கிறது.
24th
This government would encounter severe financial crisis if freebies continue to happen .
தேவையற்றது
நகைக்கடையில் மோதிரம் தேவைப்படும் போது கேட்டு வாங்கிக் கொண்டால் போதும். அவர்களிடம் இருப்பதே பாதுகாப்பானது. இந்த வீண் செலவுகள் மிச்சம்.
இரட்டை குழந்தைகள் பிறந்தால் இரண்டுக்கும் உண்டா? தாய் மாமன் விளக்கம் என்ன?
எறும்பு இழுத்து செல்லாத மோதிரமாக இருக்கணும்,மேலும்
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு