தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,950 ரூபாய்க்கும், சவரன் 1,19,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஆகஸ்ட் 24), தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 15,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, 1,20,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது .
நீண்ட நாட்களுக்கு பின், தங்கம் கிராம் 15,000 ரூபாயையும், சவரன் 1.20 லட்சம் ரூபாயையும் தாண்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 275 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
பிரத்யேக வீடியோ!
இன்றைய தங்கம் விலை நிலவரம் எப்படி; வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
கண்டரமாணிக்கம் இணைப்பு ரோடு இரு வழிச்சாலையாக்க கோரிக்கை
-
வீணாகிறது புதிய இணைப்பில் குடிநீர் வெளியேறி குழாயில் நீர் கசிவை தடுப்பது எப்போது
-
செய்தி சாரல்
-
சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை முக்கிய இடங்களில் தேவை
-
உயர்மட்ட பாலம் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி
-
துக்காராம் முண்டே ஐயா, தயவு செஞ்சு இதையும் ரெய்டு பண்ணுங்க; குபீர் சிரிப்பை ஏற்படுத்திய பாலிவுட் இயக்குனர்!