மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
சென்னை: மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழக சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேமுதிகவின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
திமுக தலைவர், ஸ்டாலின்
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று; அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தேமுதிக தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டனின் புகழ் நீடுவாழ்க.
தி மு க கூட்டணியில் இருக்கிற ஒரு எம் எல் ஏ ஐயும் வளைச்சு போட்ருங்க ஹி ஹி
பெட்டி பிரேமலதாவிற்கு அழைப்பு, ஓடியா ஓடியா ஓடியா
மக்கள் மனதில் என்றென்றும் வாழும் கேப்டன் புகழ் வாழ்க ..கேப்டனின் ஆசியோடு நடக்கும் அவர் தம்பி விஜய்யின் ஆட்சி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்மேலும்
-
கண்டரமாணிக்கம் இணைப்பு ரோடு இரு வழிச்சாலையாக்க கோரிக்கை
-
வீணாகிறது புதிய இணைப்பில் குடிநீர் வெளியேறி குழாயில் நீர் கசிவை தடுப்பது எப்போது
-
செய்தி சாரல்
-
சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை முக்கிய இடங்களில் தேவை
-
உயர்மட்ட பாலம் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி
-
துக்காராம் முண்டே ஐயா, தயவு செஞ்சு இதையும் ரெய்டு பண்ணுங்க; குபீர் சிரிப்பை ஏற்படுத்திய பாலிவுட் இயக்குனர்!