ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
கூடலுார்: 'கூடலுார் ஊசிமலை காட்சி முனையில், தடை செய்யப்பட்ட ஆபத்தான ப குதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அத்துமீறி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் எச் சரித்துள்ளனர்.
கூடலுாரில் இருந்து, 9 கி.மீ., தொலைவில், ஊசிமலை காட்சிமுனை அமைந்துள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூடலூர் மற்றும் முதுமலை இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர். இங்குள்ள ஆபத்தான பகுதிகளுக்கு, செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்., 2ம் தேதி, ஊசி மலைக்கு சென்ற, 3 கேரளா சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பாறைகள் நிறைந்த பகுதிக்கு சென்று, தேன் கூட்டின் மீது கல் எறிந்தனர்.
தேனீக்கள் கொட்டியதில் கேரளாவை சேர்ந்த ஜாபர், 23, என்பவர் உயிரிழந்தார். இருவர் உயிர் தப்பினர்.
கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி, தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், 28, என்பவர், 200 அடி பள்ளத்தில் விழுந்து, உயிருக்கு போராடினர்.
மாவட்ட நிர்வாகம், குன்னுார் வெலிங்டன் ராணுவ மீட்பு படைக் குழு உதவியுடன் பல மணி நேரம் போராடி, அவரை உயிருடன் மீட்டனர்.
இதை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பகுதிகளில், சுற்றுலா பயணிகள் செல்வதையும், அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதையும் கண்காணித்து தடுக்கும் வகையில், தற்போது வனத்துறையினர் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஊசிமலை காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தடுக்க, தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகிறோம்.
மேலும், 9 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதிக்கு செல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
வெறுமனே நடவடிக்கை என்று இல்லாமல் 10 ஆண்டு சிறை தண்டனை என்று சட்டங்களை கடுமையாக்க வேண்டும். மீட்புக்கான செலவையும் வசூலிக்க வேண்டும். இந்த மாதிரி ரீல்ஸ் எடுக்கும் வீணர்களால் அரசுக்கு தேவையில்லாத செலவு , மற்றும் மீட்பு படையினர் தேவையில்லாமல் ஆபத்தான வேலைகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.. அவர்களுக்கு மட்டும் குடும்பம் இல்லையா ?மேலும்
-
கண்டரமாணிக்கம் இணைப்பு ரோடு இரு வழிச்சாலையாக்க கோரிக்கை
-
வீணாகிறது புதிய இணைப்பில் குடிநீர் வெளியேறி குழாயில் நீர் கசிவை தடுப்பது எப்போது
-
செய்தி சாரல்
-
சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை முக்கிய இடங்களில் தேவை
-
உயர்மட்ட பாலம் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி
-
துக்காராம் முண்டே ஐயா, தயவு செஞ்சு இதையும் ரெய்டு பண்ணுங்க; குபீர் சிரிப்பை ஏற்படுத்திய பாலிவுட் இயக்குனர்!