புதுச்சேரி மதுபாட்டில்கள் பண்ருட்டிக்கு கடத்திய 3 பேர் கைது

பண்ருட்டி: பண்ருட்டிக்கு: பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று பி.டி.ஓ., அலுவலகம் முன் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கடலுார் மார்க்கத்தில் இருந்து வந்த டி.என்.31.சி.யூ.7917 பதிவெண் கொண்ட டிவிஎஸ் ஸ்கூட்டரில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், 48 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் காடாம்புலியூரை அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த ெருமாள் மகன் பத்மாநாபன்,47: என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதேபோல் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றில் சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்து 19 சாராய பாக்கெட், சிறுவத்துார் சரவணன்,30; என்பவரிடம் 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் மற்றும் கலால் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து மூவரையம் கைது செய்தனர்.

Advertisement