விநாயகர் சிலை ஊர்வலத்தில் முட்டை வீச்சு; மும்பையில் பதற்றம்
மும்பை: மஹாராஷ்டிராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மூட்டை வீசிய சம்பவத்தை தொடர்ந்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், மும்பையில் ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அந்த வகையில், நேற்றிரவு மும்பை மஸ்கான் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து விழா குழுத் தலைவர் ஹிதேஷ் ஜாதவ் கூறுகையில், " இன்று நடந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, அருகே உள்ள கட்டடங்களில் இருந்து யாரோ முட்டை வீசியுள்ளனர். 24 மணி நேரத்திற்குள் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். அவர்களும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்துள்ளனர்," எனக் கூறினார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டும் நாக்பாடா பகுதியின் காமாதிபூராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
நடவடிக்கை எடுக்குமா ஹிந்து சமய அறநிலைத்துறை
-
பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
-
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம், பரந்துார் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு
-
அரசு மருத்துவமனையில் வென்டிலெட்டர் வெடித்ததில் 3 பச்சிளம் குழந்தைகள் பலி; மஹா.,வில் சோகம்
-
பணக்கார நுகர்வோர் எண்ணிக்கை; 2036க்குள் சீனாவை இந்தியா முந்தும்!
-
அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; ராகுலிடம் அனுமதி பெற்றாரா? என பாஜ விமர்சனம்