செப்.,2ம் தேதி முன்னாள் படை வீரர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 2ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 2ம் தேதி மாலை 3:00 மணிக்கு கலெக்டர் பத்மஜா தலைமையில் நடக்கிறது.

கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்று, துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவரிக்கின்றனர். சுய தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று, பயன்பெற வேண்டும்.

முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் மற்றும் படையில் பணிபுரிந்து வருவோரின் குடும்பத்தினர் கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக கொடுத்து அடையாள அட்டை நகலுடன் இரட்டை பிரிதிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement