திடீர் ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது

நேற்று 33 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி 11 மணிக்கு பின் இறங்க ஆரம்பித்து 105 புள்ளிகள்வரை இறங்கியது. பின்னர் நாளின் இறுதியில் 32 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.25 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு குறைந்த பட்சமாக 0.35 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
Latest Tamil News
இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.59 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.93 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,673 நிறுவனங்களின் பங்குகளில் 1,740 ஏற்றத்துடனும்; 1,820 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன.

நிப்டியின் ஆர்.எஸ்.ஐ., 47.85 என்ற அளவில் கிட்டத்தட்ட நடுநிலைமையில் உள்ளது. பாஸ்ட் ஸ்டோக்காஸ்ட்டிக் %கே 67.30 என்ற அளவிலும் %டி 63.10 என்ற அளவிலும் இருப்பது குறுகிய கால மொமென்டத்தில் சிறியதொரு முன்னேற்றம் உருவாகியுள்ளதை காட்டுகிறது.

எம்.ஏ.சி.டி., 13.22-ல் இருப்பது குறுகிய கால மொமென்டம் இன்னும் முழுமையாக பலம்பெறவில்லை என்பதை உணர்த்துகிறது. ஆர்.ஓ.சி., -1.69 என்ற அளவில் இருப்பது மொமென்டத்தில் இன்னும் சற்று பலகீனம் எஞ்சியிருப்பதை காட்டுகிறது.

இவற்றை வைத்து பார்த்தால் நிப்டியின் உடனடி சப்போர்ட்டாக 24,190-24,205 என்ற லெவல்கள் இருக்கின்றன. இந்த லெவலுக்கு கீழ் இறங்காமல் இருக்கும் பட்சத்தில் 24,290-24,315 என்ற லெவல்வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,315-க்கு மேல் நிறைவடைந்தால் 24,430 வரையிலுமே செல்ல வாய்ப்புள்ளது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

அதேநேரம், 24,190-க்கு கீழே சென்றால் 24,000 வரை செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. டெக்னிக்கல்கள் பெரிய அளவில் சாதகமாக இல்லாத சூழல் தென்படும் போதும் திடீர் ஏற்றத்திற்கான வாய்ப்பு இல்லை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது.

Advertisement