பரந்துார் விமான நிலையம் ரத்து; காங்., வரவேற்பு
சென்னை: 'பரந்துார் விமான நிலையம் கைவிடப்பட்டதை வரவேற்கிறோம்' என, காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஏழு ஆண்டுகளாக ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க போராடி வந்தனர். பரந்துார் விமான நிலைய திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையில், 'பரந்துார் நீர்நிலைகளால் சூழப்பட்ட பகுதி; தேர்வு செய்யப்பட்ட நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பகுதி, பாசன குளங்களை கொண்டது' என, குறிப்பிட்டுள்ளது.
தாழ்வான நிலப்பரப்பு மற்றும் நீர் தேங்கும் தன்மை ஆகியவை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அரசின் பதிவில் இருந்தன. நிலம் கையகப்படுத்த, சட்ட நடைமுறையிலும் தீவிரமான குறைபாடுகள் இருந்தன.
மாற்றுத் திட்டத்திற்கும் அரசு தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்த இடம் தேர்வு செய்யப்பட்டாலும், பாதிக்கப்படும் மக்களுடன், உண்மையான, வெளிப்படையான ஆலோசனை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!’ –––––––––––––––
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்