வால்டர் ஸ்கடர் பள்ளியில் ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல் 

திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில் ‘தினமலர் – பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

‘தினமலர்’ நாளிதழ் சார்பில், கல்வி சேவையாக மாணவர்களுக்கான ‘தினமலர் – பட்டம்’ இதழ் வெளியாகிறது. இந்த சிறப்பிதழ், பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்களை வழங்கி வருகிறது.

மாணவர்களுக்காக இந்த சிறப்பிதழ், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியாகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு வினாடி – வினா போட்டிகளையும் நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறது.

திண்டிவனம் நகராாட்சி 28வது வார்டைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி  சுகுமார் முன்னிலையில் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் இதழ் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது.

தலைமையாசிரியர் ஆம்ஸ்டிராங் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர்கள் ஜெபா, மோகன், குளோரி, பிரேம்சந்தர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம் வடகிழக்கு த.வெ.க., மாவட்ட செயலாளர் சக்திவேல் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பிரசன்னா, சரத்குமார், மணி, வேந்தன், ராக்கேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement