பயனில்லாத ஆறாவயல் சாலை

காரைக்குடி: காரைக்குடியில் இருந்து ஆறாவயல், சித்திவயல், மித்ரா வயல் செல்லும் ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளன.

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மித்ராவயல், நென்மேனி மற்றும் சித்திவயல் ஆறாவயல் பகுதியைச் சேர்ந்த மக்கள் தினமும் காரைக்குடி வந்து செல்கின்றனர். ஆறாவயலில் இருந்து நென்மேனி- சித்திவயல் இணைப்பு ரோடு வரை முற்றிலும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் செல்ல முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

Advertisement