கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம்
கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை துவங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது. பொது இடங்கள், பள்ளி கல்லுாரிகள், வீடுகளில் அத்தப்பூக் கோலம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மேலும் பல வகையான காய்கறிகள் சமைத்து உணவு பரிமாறுவார்கள். கேரளாவில் ஓணம் பண்டிகையை அனைத்து மதத்தினரும் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் நேற்று கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ரேணுகா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். துணை முதல்வர் வாணி வரவேற்றார்.
ஓணம் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இயற்பியல் துறை பேராசிரியை சிந்துஜா பேசினார். கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
அத்தப்பூக் கோலம் போட்டனர், அனைத்து துறை விரிவுரையாளர்கள், பேரவை உறுப்பினர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!’ –––––––––––––––
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்