பாரதிதாசன் இலக்கிய மன்றம் கட்டுரைப்போட்டி அறிவிப்பு

கடலுார்: ஆசிரியர் தினத்தையொட்டி மாவட்ட பாரதி தாசன் இலக்கிய மன்றம் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக கட்டுரை போட்டி அறிவித்துள்ளது.

இதன்படி 'எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்' என்ற தலைப்பில் ஏ4 அளவு வெள்ளைத் தாளில் ஒரு கட்டுரை ஆசிரியர் மற்றும் அனுப்புவர் படம், மொபைல் எண் ஆகியவற்றை தபால் மூலம் வரும் 27ம் தேதிக்குள் பாரதி தாசன் இலக்கிய மன்றம், எண் 41, காமராஜர் நகர், ஆல்பேட்டை, கடலுார்.1. வாட்ஸ் ஆப் எண் 98653 54768ல் அனுப்பி வைக்க வேண்டும்.

சிறந்த கட்டுரைக்கு பரிசும், பாராட்டும் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் தினவிழாவில் வழங்கப்படும் என மன்ற தலைவர் நாகராஜன் அறிவித்துள்ளார்.

Advertisement