அச்சுறுத்துவது போல முதல்வர் பேசுவதா?

3

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், நாளை முதல் 31ம் தேதி வரை, தமிழகம் முழுதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். முதல்வர் விஜய், முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த மூன்று கோப்புகள் தன்னிடம் உள்ளதாக கூறுகிறார். முறைகேடுகளுக்கான ஆதாரம் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை போல அவர் பேசும் விதம் பொருத்தமானது இல்லை.

மேட்டூர் அணையில் அடுத்த சில நாட்களில் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துவிடும். டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக அணை எப்போது திறக்கப்படும் என, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

- சண்முகம், தமிழக செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Advertisement