அங்கனாமலை அம்மையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், நாரலப்பள்ளி பஞ்., மகாராஜகடை அங்கனாமலை அம்மையப்பர் திருநெறிய தீந்தமிழ் வேள்வி மற்றும் வழிபாடு நடந்தது. இதில், மலை மேல் அமைந்துள்ள மகா கணபதி, ராமர், காட்டுவீர ஆஞ்சநேயர் சுவாமிக-ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


காலை, 6:30 மணிக்கு, கலைநிகழ்ச்சி, சேவாட்-டமும், 7:30 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் விநா-யகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக அங்கனா-மலை சென்றனர். 10:30 மணிக்கு, திருநெறிய தீந்-தமிழ் அம்மையப்பர் வேள்வி, அபிஷேகம், திரு-குட நன்னீராட்டு, சிறப்பு அலங்காரம், பேரொளி வழிபாடு, திருநீற்று பிரசாதம் வழங்குதல் ஆகி-யவை நடந்தது. இதில், கந்திகுப்பம் பைரவ சுவா-மிகள் பூஜையை நடத்தினார்.

Advertisement