தொடர் முழக்க போராட்டம்
காரைக்குடி, ஆக.26-காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்கிடு, அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். வாரிசு வேலை அனைவருக்கும் வழங்கு, தரமான உதிரி பாகங்களை தடையின்றி வழங்க வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காரைக்குடி அருகே மானகிரி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) மண்டல தலைவர் தெய்வீரபாண்டியன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சிவாஜி வாழ்த்துரை வழங்கினார். ஜெகந்நாதன், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் அழகர்சாமி, மண்டல பொது செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் நிறைவுரை ஆற்றினார். தியாகராஜன் நன்றி கூறினார்.
மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'