உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
கோவை: உரிமம் பெறாமல் இயங்குதல், சுகாதாரமற்ற முறையில்பராமரித்தல், உணவுக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்றல் ஆகியவற்றிற்கு, இதுவரைவிதிக்கப்பட்டு வந்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீசாருடன், உணவு பாதுகாப்பு துறையையும் இணைத்து 391 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாரத்தில் இரு நாட்கள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன், ஆய்வுப்பணிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக, உரிமம் பெறாத உணவுக்கடைகளுக்கு, எப்படி பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது என்பதை முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகும் உரிமம் பெறாமல் இருந்தால், ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். இதற்கு முன்பு, அபராதத்தொகைரூ.5 ஆயிரமாக இருந்தது.
இதேபோல, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால் முன்பு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது, 10 ஆயிரம் ரூபாய் வரை விதிப்பதோடு, இத்தொகையை மூன்று நாட்களுக்குள் கருவூலத்தில் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வினா வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், மாதந்தோறும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். போ தைப்பொருள் விற்கும் உணவுக்கடைகள், முதல் முறை ஆய்வில் சிக்கினால் ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை சிக்கினால் ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை பிடிபட்டால், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்துடன், 3 மாதம் வரை உணவுக்கடைக்கு சீல் வைக்க வேண்டும்.மூன்று முறைக்கு மேல் போதைப்பொருள் விற்றால் நிரந்தரமாக உரிமம் ரத்து செய்ய, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
டீ கடைன்னு ஆரம்பிக்கறானுங்க மெதுவா வடை, மினி டிபன், தோசை இட்லின்னு ஆரம்பிச்சு சின்ன ஹோட்டல் நடத்தறாங்க அதும் கடை ஒரு இடத்தில இருக்கும் வெளியில் கார்பொரேஷன் இடத்தில் கடை நடக்கும் அநியாயம் பண்றனுங்க இதுக்கு license வாங்கி இருக்காங்களான்னு தெரியாது எவனும் இதை கண்டுக்கறத தெரியல ஆட்சி மாறினாலும் காட்சிகள் அப்படியே
ஆமாங்க, எங்க அமைச்சர் தன் கைகுழந்தைக்கு ஐபிஎல் மாட்சுல பொடிமருந்து தயாரித்த மாதிரி சுகாதாரமாக இருக்க வேண்டும்.
அதாவது போலீசுக்கும் அரசியல் வியாதிகளுக்கும் கமிஷன் அதிகரித்திருக்கிறது
சுகாதாரமாற்றமுறையில் உணவுப்பொருட்களை தயார்செய்து விற்பனை செய்யும் உணவகங்கள் பதிவு செய்திருந்தாலும் உரிமம் பெறாமலிருந்தாலும் நடவடிக்கை தேவை. இவற்றை முழுவதுமாக தடைசெய்யமுடியாதென்றாலும் அடிக்கடி சோதனை செய்து நடவடிக்கை அவசியம். மகாராஷ்டிரா மற்றும் உபி போன்ற மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அபராதத்தொகையை அதிகரித்திருப்பதால் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என எதிர்பார்த்திருக்கும்வேளையில் லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்ட அதிகாரிகள் இதை பயன்படுத்தி லஞ்சவசூலை அதிகரிக்காமல் இருக்கவேண்டும். அப்படி நடந்துகொள்பவர்கள்மீதும் தண்டனையை அதிகரிக்கவேண்டும்.மேலும்
-
கண்டெய்னர் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
கேரள பாரம்பரிய உடையில் வந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள்; வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் ஓணம் பண்டிகை கோலாகலம்
-
பி.எம்.டபுள்யூ., 'எக்ஸ் - 1 லாங் வீல் பேஸ்' நீளம், உயரம், பூட், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பு