லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
ஹைதராபாத்: தெலங்கானா அருகே தனியார் சொகுசு பஸ், இரும்பு ராடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ், தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள துர்காபுரம் அருகே சென்ற போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு ராடுகளை ஏற்றியிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. அந்த பஸ்ஸில் மொத்தம் 43 பேர் பயணம் செய்த நிலையில், 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாலை 5.20 மணியளவில் நடந்த இந்த விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தவிர்ப்பது நல்லது
இந்த விபத்து அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம் , அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஏன் லாரியை ரோட்டில் நிறுத்தி வைக்க வேண்டும்? இது தான் காரணம். பகலிலும் இது நடக்கலாம். வேகமாக போகும் பொது திடீரென நிறுத்திவைத்திருக்கும் வாகனம் எப்போதுமே ஆபத்து தான். அதுவும் லாரி முழுக்க இரும்பு கம்பி
தவிர்ப்பது ள்ளது சரி. லாரிகளில் பின்புறம் சிவப்பு விளக்கு எரிவதில்லையெ. அது சரி என படுத்தா? மோட்டார் சைகிளில், ஸ்கூ ட்டர்களில், கார்களில், பஸ் களில் சிவப்பு விளக்கு மிளிர்கிறது. லாரிகளில் எரிவதில்லை? அவர்களுக்கு என்ன கொம்பா முளையத்திருக்கா? 50 ஆண்டுகளுக்கு முன்பு வறை சிவப்பு விளக்கு எரிய விடவிட்டால் அபராதம் விதித்தார்கள் இப்போது எப்படி?
365 நாட்களுக்கும் ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை.. இப்போது தனியார் பேருந்தில் அதிகக்கட்டணம் கொடுத்து அதற்கும் அழுது உயிர்போய் அதற்கும் அழவேண்டியுள்ளது..
தினமலர் எப்போதும் அதி காலை பயணம் வேண்டாம் என்று தலையில் அடித்து கொள்கிறார்கள் ஆனால் யார் கேட்கிறார்கள். bus travel to be avoided
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு ராடுகளை ஏற்றியிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது
கட்கரி சொன்னா மாதிரி பறக்கும் பஸ்கள் வந்தாத் தான் உண்டு போல.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
1). டிராவல்ஸ் அதிவேகமாக பயங்கரமாக கருணகொடுரமாக வண்டி ஓட்டுகிறார்கள்.
2). கீழே 6 லைட் மேலே நாலு லைட் வைத்து அதுவும் LED லைட் வைத்து வண்டி ஓட்டுகிறார்கள்.
3). பயங்கரமான சத்துடன் கூடிய ஹாரன் வைத்து வண்டி ஓட்டுகிறார்கள்.
4). ரோடு அவர்களுக்கு மட்டுமே போட்டு உள்ளது போல் வண்டி ஓட்டுகிறார்கள்.
5). கண்டிப்பாக டிராவல்ஸ் டிரைவர்களை இடையிடையே நிறுத்தி போதை பொருள்கள் உபயோகம் செய்கின்றார்களா என்று கண்டு அறிய வேண்டும்.
கதி சக்தி ஜிந்தாப்பாத். சாலைகள் உலகத் தரத்துக்கு போட்டாச்சு ஹைன். லாரி நிறுத்த இடம் இல்லை ஹைன்... நாம இரங்கல் தெரிவிச்சு என்ன ஆகாப்போகுது ஹைன்?
பல்லாயிரம் கோடி டோல்கேட் வசூலை முழுங்கும் நாஹாய் ரோந்து வாகனங்களை வைத்து இப்படி நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களுக்கு ஒரு தீர்வு காண வேண்டாமா?
இதற்கும் அரசு தான் காரணமா?
அப்போ சரி வெங்க-டேஷு, நேரு காரணம்ன்னு சொல்லீடலாமா?
அப்படி தூக்கம் வருவதாக இருந்தால் இடையில் சிறிது நேரம் நிறுத்தி ஓய்வு எடுத்துவிட்டு செல்லலாம். தாமதமானால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இப்போது உயிரை போயிற்று. தயவுசெய்து சிந்திக்க வேண்டும்மேலும்
-
லைட் ரீடிங்... களைகட்டிய கலைத்திருவிழா போட்டிகள் இசை, நடனம், நாடக திறமைகளை வெளிப்படுத்தி பள்ளி மாணவர்கள்
-
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு சேவை உரிமை ஆவண திட்டம் செப். 1ல் அமல்
-
கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
-
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் காயம்
-
2 மாதங்களில் 731 சாலை விபத்து 1,204 பேருக்கு அவசர சிகிச்சை
-
டவுன் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்