சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நேற்று தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளின் உடமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, வடமாநில பெண்கள் பயணிகள் இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் சட்டவிரோதமாக 6 கிலோ அளவுக்கு ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் போலீஸில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட இருவருக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி கஞ்சா பறிமுதல், தங்கம் வெள்ளி பறிமுதல் என்று தினம் தினம் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. சிறப்பு. ஆனா ஒரு டவுட்டு. இப்படி பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டபிறகு எங்கே செல்கின்றன? எங்கே செல்கின்றன என்கிற செய்தியையும் பத்திரிகை நிருபர்கள் வெளியிடவேண்டும்.மேலும்
-
வடகிழக்கு பருவமழை; சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்
-
கங்கனா ரனாவத் - க்ரீத்தி சனோன் சண்டையில் புகுந்த ராகுல்
-
விமான நிலையமும் வேணும்... விவசாயமும் வேணும்; சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்
-
மேட்டூர் அணை நாளை மறுநாள் திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
-
மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் ரூ.950 கோடி; ஒரு நாளைக்கு ரூ.2.60 கோடி!
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘ரூ.6,000 முதலீட்டில் துவங்கிய தொழில் இப்போது ரூ.30 லட்சத்தில் நடக்கிறது!’ –––––––––––––––