மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
சென்னை: மிலாது நபியையொட்டி முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்; ஈத் முபாரக்! மிலாது நபி நன்னாளில் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் நமது வாழ்வில் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும். இரக்கமும், சமுதாய நலனுக்கான மனப்பான்மையும் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி; இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்! இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்.
எந்த நபிமார்களின் பிறந்த இறந்த நாட்களையும் அனுசரிப்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை ஏக இறைக் கோட்பாடுகளை மீறியதாகும். ஏனெனில் என்னதான் இறைத்தூதராக இருந்தாலும் அவர்கள் இறைவனுக்கு சமமானவர்களல்ல. இஸ்லாமிய அறிஞர்கள் இந்த மீலாது பற்றி விளக்கிக் கூறி இந்த விடுமுறை, வாழ்த்துக்கள் போன்றவற்றை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும். எந்த அரபு நாட்டிலும் மீலாது விழா கிடையாது.மேலும்
-
கண்டெய்னர் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
-
கேரள பாரம்பரிய உடையில் வந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள்; வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் ஓணம் பண்டிகை கோலாகலம்
-
பி.எம்.டபுள்யூ., 'எக்ஸ் - 1 லாங் வீல் பேஸ்' நீளம், உயரம், பூட், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பு