பெண்ணாடம் பகுதியில் திடீர் மழைநெல் கொள்முதல் பணிகள் பாதிப்பு  

பெண்ணாடம், ஆக. 26–

பெண்ணாடம் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக, நெல் மூட்டைகள் நனைந்து, கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெண்ணாடம் மற்றும் மாளிகைக்கோட்டம், தாழநல்லுார், கிளிமங்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த இருவாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

இங்கு, சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்க மூட்டைகளாகவும் மற்றும் டிராக்டர் டிப்பரில் கொண்டு வந்து தரையில் கொட்டியும் வைத்திருந்தனர்.

நேற்று அதிகாலை பெய்த திடீர் கனமழை காரணமாக பெண்ணாடம், மாளிகைக்கோட்டம், வெண்கரும்பூர், நந்பை்பாடி பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. மேலும், மழை காரணமாக கொள்முதல் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Advertisement