திருட்டு வழக்கில் தப்பி தலைமறைவானவர் கைது

தொண்டி: தொண்டி அருகே திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் கலந்தர். 2024ல் இவருடைய வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் நகைகளை திருடிச் சென்றனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் எஸ்.பி.பட்டினம் அருகே விளத்துமணக்கோட்டையை சேர்ந்த பழனியை 37, கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடந்தது. ஜாமினில் சென்ற பழனி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் சோழகன்பேட்டையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது பழனியை கைது செய்தார். 

––

Advertisement