மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் ரூ.950 கோடி; ஒரு நாளைக்கு ரூ.2.60 கோடி!
புதுடில்லி: கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் ஆண்டு ஊதியம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இவரது 2025ம் நிதியாண்டு சம்பளம் மட்டும் ரூ.950 கோடியாகும்.
உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் 2024ம் நிதியாண்டின் ஆண்டு வருமானம் ரூ.750 கோடியாக இருந்தது. இந்த நிலையில், இது 2025ம் நிதியாண்டில் ரூ.950 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகமாகும். இதில் 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான பங்குகள், 2.5 மில்லியன் டாலர் அடிப்படைச் சம்பளம் மற்றும் 9.5 மில்லியன் டாலர் ரொக்கப் போனஸ் ஆகியவை அடங்கும்.
மைக்ரோசாப்டின் வருவாய் 2025ம் நிதியாண்டில் சுமார் 15 சதவீதம் அதிகரித்தது. அதேபோல, இயக்க லாபம் 17 சதவீதம் உயர்ந்தது. கிளவுட் வருவாய் 23 சதவீதம் அதிகரித்து 169 பில்லியன் டாலருக்கும் குறைவாகவும், அஷ்யூர் வருவாய் 34 சதவீதம் அதிகரித்து 75 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.
அதிக வருவாய், லாபம் ஆகியவையால் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் மைக்ரோசாப்டை ஒரு தெளிவான ஏஐ முன்னணி நிறுவனமாக நாதெல்லாவின் தலைமை நிலைநிறுத்தியுள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு...
சத்யா நாதெல்லாவின் ஓராண்டு சம்பளம் ரூ.950 கோடி என்றால், மாதத்துக்கு ரூ.79 கோடி ஆகிறது. அதாவது, ஒவ்வொரு நாளைக்கும் அவரது சம்பளம் ரூ.2.60 கோடி. ஒரு மணி நேரத்துக்கு அவரது சம்பளம் ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்
கேளுங்கள் மணித்தியாலத்துக்கு எத்தனை கோடி கொள்ளையடிக்கலாம்னு சொல்லி தருவார்
போன டிசம்பர் ல ஒரு நேர்காணல் சென்றிருந்தேன், அங்கே அந்த நிறுவதின் மேலாண் இயக்குனர் ஒரு கேள்வி கேட்டார்,
உலகத்திலே அதிக சம்பளம் வாங்குற ஆள் யார் தெரியுமா? அவர் நாள் சம்பளம் என்ன தெரியுமா? என்றார்
நான்: தெரிவில்லை, மைக்ரோ சாப்ட் சி இ ஓ சுந்தர் பிச்சை அதிகம் சம்பளம் வாங்குவர் என்று நினைக்கிறன், வேறு யாரு அதிகம் வாங்குகிறார் என்று தெரியவில்லை என்று கூறினேன்,
உடனே அவர், இதுகூட தெரியலை எப்படி? நாட்டு நடப்பு தெரியலையே? என்றார்,
நான்: சரி சார் நீங்க எனக்கு எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று கேட்டேன்,
75 ஆயிரம் என்றார் நான் கேட்டிருந்தது இரண்டு லட்சம்
இதுக்கு மேல நான் எப்படி அவனை திட்டியிருப்பேன் என்று நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்..........
இந்த சுமைகள் எல்லாம் நுகர்வோர் தலையில்..
In tamilnadu , I believe , that some people have 30000 crores in two years. What s recieved by Satya is very very meagre when compared to this
Dravidian political thieves made more than lakhs of crores in past years not just 30000 crores
One dishonest dmk man earned 1.76 lakh crores with just one signature.
ஏன் இவ்வளவு குறைவான சம்பளம்? அவருக்கு எப்படி கட்டுப்படியாகிறது?
பாவம் ஏழை என்ன செய்வாரு கட்டுப்படியாகலாதான் வேற பொழைப்பு கிடைக்காமத்தான் மைக்ரோசொப்ட்ல குப்பை கொட்டுறாரு
காசு மேல காசு வந்து கொட்டுற நேரம் இது
இவ்வளவு பெரிய தொகை ஏற்புடையதல்ல இவ்வளவு கொடுக்காவிட்டால் என்ன மைக்ரோசாஃப்டை விட்டுவிட்டு வேற கம்பெனிக்கு மாறி விடுவாரா மேட் பைத்தியக்காரன் கார்ப்பரேட் உலகம் என்ன வேண்டுமானாலும் செய்யும் ஒரு திறமையான தலைவர் வேண்டியதுதான் வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் என்றால் அதை எப்படி ஜீரணிப்பது
உங்களுக்கு மனசு மனசு. உங்க உங்களுக்கு மறுத்து விடுவீர்கள். ஆனால் உங்களுக்கு இந்த அளவிற்கு யாரும் கிடையாது.
விஷயம் அதுவல்ல. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து மைக்ரோசாப்ட் சம்பாதிக்கும் பணமே லட்சம் கோடிகளை தாண்டும். இதற்கு எந்த தடங்கலும் வந்துவிட கூடாதவாறு இந்தியர்களின் அடிமை சிந்தனை மாறிவிடாமல் காப்பதுவும் முக்கிய இவரின் வேலையாய் நிறுவனம் நிர்பந்திக்கும்..
அவர் தினமும் சாப்பிடுவதோ ஒரு நாலு கைப்பிடி.