விஜயகாந்த் பிறந்தநாள் விழா தொழிற்பேட்டையில் அன்னதானம்

விருத்தாசலம், ஆக. 26–

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள தவுலத் செராமிக் நிறுவனத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தவுலத் செராமிக் நிறுவனர் ஆனந்தகோபால் தலைமை தாங்கினார். சஞ்சய் ஆனந்தகோபால் வரவேற்றார்.

தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா, சதீஷ் எம்.பி., மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் நகர செயலர் சரவணன், தனஞ்செயன், ஜி.பி.டபுள்யூ., சேம்பர் பிரபா, வர்த்தகர் சங்க செயலர் மணிவண்ணன், கவுன்சிலர் கருணா, விவசாய சங்க தலைவர் கிரி, கங்காசலம், மாவட்ட இளைஞரணி ஜானகிராமன், பாலமுருகன்,  முருகன், அய்யப்பன், சபரி, சக்கரவர்த்தி, சுரேஷ்பாபு, அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement