சிறுமியிடம் அத்துமீற முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

திருக்கோவிலுார்: சங்கராபுரம் அருகே பள்ளி சிறுமியிடம் பலாத்காரம் செய்ய முயன்றவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் அய்யனார், 30; இவர், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 16 வயது சிறுமி ஒருவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டதால் அய்யனார் தப்பியோடினார்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.

Advertisement