பி.எம்.டபுள்யூ., 'எக்ஸ் - 1 லாங் வீல் பேஸ்' நீளம், உயரம், பூட், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பு
'பி.எம்.டபுள்யூ.,' நிறுவனம், 'எக்ஸ் - 1 லாங் வீல் பேஸ்' என்ற புதிய மாடல் சொகுசு எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை, 'எக்ஸ் 1' காரை விட, ஒரு லட்சம் ரூபாய் குறைவு.
'எக்ஸ் 1' காரை விட, இந்த காரின் நீளம் 116 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 20 எம்.எம்., உயரம் 11 எம்.எம்., பூட் ஸ்பேஸ் 64 லிட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் சக்தி வாய்ந்த, 1.5 லிட்டர், 3 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது. பிரண்ட் வீல் டிரைவ், 7 - ஸ்பீடு கியர், மேம்படுத்தப்பட்ட பின்புற சஸ்பென்ஷன் ஆகியவை இயந்திர அம்சங்கள் ஆகும்.
நீளம் 4.6 மீ உள்ள இந்த காரில், மேம்படுத்தப்பட்ட 18 அங்குல அலாய் சக்கரங்கள், உட்புற, வெளிப்புற எம் - ஸ்போட் ஸ்டைலிங், அதிகரிக்கப்பட்டுள்ள பின்வரிசை இடவசதி, 10.25, 10.7 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, டூயல் ஜோன் ஏ.சி., 8 காற்று பைகள், அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு, வென்டிலேஷன் இல்லாத பவர்டு சீட்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார், மொத்தம் 4 நிறங்களில் கிடைக்கிறது.
@block_B@ இன்ஜின் - 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் பவர் - 156 ஹெச்.பி., டார்க் - 230 என்.எம்., மைலேஜ் - 15.5 கி.மீ., (0 - 100 கி.மீ.,) பிக்கப் - 9.3 வினாடி கிரவுண்ட் கிளியரன்ஸ் - 180 எம்.எம்., பூட் ஸ்பேஸ் - 540 லிட்டர்block_B
@block_B@ விலை - ரூ. 49.50 லட்சம்block_B
மேலும்
-
கண்டெய்னர் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
-
கேரள பாரம்பரிய உடையில் வந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள்; வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் ஓணம் பண்டிகை கோலாகலம்