ராகவேந்திரர் கோவிலில் 355ம் ஆண்டு ஆராதனை  

விழுப்புரம்: வளவனுார் குமாரகுப்பம் ஸ்ரீராகவேந்திரர் சுவாமி கோவிலில், 355ம் ஆண்டு ஆராதனை விழா நடக்கிறது.

 விழாவையொட்டி, வரும் 29ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வளவனுார் ஆனந்தா திருமண மண்டபத்தில், காலை 9:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது.

 மறுநாள், அதிகாலை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம்,  மகா வேள்வி, அபிேஷகம், மாலை ஸ்ரீராகவேந்திர சுவாமி வீதியுலா நடக்கிறது.

தொடர்ந்து 31ம் தேதி காலை ஸ்ரீராகவேந்திர சுவாமி மற்றும் பரிவாரங்களுக்கு அபிேஷக, ஆராதனையும், மாலை பக்தி பஜனையுடன், சிறப்பு பூஜை நடக்கிறது.

 

Advertisement