மணிமுக்தாற்றில் ‘மாஸ் கிளீனிங்’

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி சார்பில், மணிமுக்தாற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணிமுக்தாற்றை சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

இதில், நகராட்சி கவுன்சிலர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், கல்லுாரி மாணவர்கள், நகர வர்த்தகர் நல சங்க நிர்வாகிகள், விவசாய நல சங்கம், போலீசார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மணிமுக்தாற்றில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை பொறுக்கி சுத்தம் செய்தனர். மேலும், ஆற்றில் இருந்த சீமை கருவேல மரங்கள், முட்புதர்களை வெட்டி அகற்றினர். 

Advertisement