வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே பொன்னம்மாள் நகரை சேர்ந்த போஸ் மனைவி சைனி 40. இவரது வீட்டின் முன் நேற்று இரவு 8:00 மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் பட்டு வெடித்து சிதறியது. எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., சங்கர், தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரித்தனர். சைனிக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராபின் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் ராபின், அவரது தம்பி சூர்யா , கூட்டாளிகளுடன் வீட்டுக்கு வந்தபோது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சூர்யா பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. இதில் ராபினை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement