ஈரான் எண்ணெய் இறக்குமதி எதிரொலி: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
வாஷிங்டன்: மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தை அடுத்து, ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததாக, இந்தியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஈரானின் வருவாய் ஆதாரங்களை முடக்கும் நோக்கில் 'ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற நடவடிக்கையை அறிவித்துள்ளார். அதன்படி, ஈரானுடனான பொருளாதார உறவுகளை உலக நாடுகள் துண்டிக்க வேண்டும், இல்லையெனில் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள், ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்குதல், விற்பனை, போக்குவரத்து அல்லது சந்தைப்படுத்துதல் தொடர்பான முக்கிய பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்களின் மீது அமெரிக்கா கருவூலத்துறை பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடையை எதிர்கொள்ளும் நிறுவனங்கள்
1.போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்.எல்.பி., மற்றும் அதன் பங்குதாரர்கள்
2.சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட்
3. பி.பி.சாப்டெக் பிரைவேட் லிமிடெட், அதன் இயக்குநர் பிரசாந்த் கார்க்
4.பிரக்ருதீஸ் இன்ப்ரா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட்.
மேலும்
-
கர்நாடகாவில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும்: சொல்கிறார் முதல்வர் சிவகுமார்
-
மாவட்ட அளவிலான செஸ் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
-
குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தர்மநல்லுார் ஆதிதிராவிடர் நலப்பள்ளி சாதனை
-
விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி முடிவது எப்போது? தேத்தாம்பட்டு கிராம இளைஞர்கள் எதிர்பார்ப்பு
-
இன்றைய நிகழ்ச்சி
-
பன்றி காய்ச்சல்: மாவட்டத்தில் பண்ணைகளில் ஆய்வு