கர்நாடகாவில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும்: சொல்கிறார் முதல்வர் சிவகுமார்

1

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும் என்று அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். அதன் சித்தாந்தத்தை நம்புகிறேன். கட்சி முடிவுகளுக்கு துணை நிற்பேன்.

என் அனுமதியின்றியோ அல்லது கவர்னர் அலுவல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் வந்தே மாதரம் பாடல் முழுமையாக ஒலிக்கும் என்று நினைக்கிறேன்.ஆனால் எதிர்காலத்தில் வந்தே மாதரத்தின் இரு பத்திகள் மட்டுமே பாடப்படும்.

இவ்வாறு முதல்வர் டி.கே. சிவகுமார் பேசினார்.

முன்னதாக, அனைத்து அரசு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டது, குறிப்பிடத்தக்கது.

Advertisement