குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தர்மநல்லுார் ஆதிதிராவிடர் நலப்பள்ளி சாதனை
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த குறுவட்ட மைய அளவிலான டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில், தர்மநல்லுார் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில், குறுவட்ட மைய அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 200, 400, 600, 1,500 மற்றும் 3,000 மீட்டர் தடகளப் போட்டிகள், எறிபந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன.
இதில், எறிபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிகள், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில், எறிபந்து ஆண்கள் பிரிவில் 14, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோபாலபுரம் ஜெயப்பிரியா பள்ளி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது.
இதேபோல், டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தர்மநல்லுார் ஆதிதிராவிடர் நலப்பள்ளியும், 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் பெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தர்மநல்லுார் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியிர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பிரகாசம், மனோகர் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
-
சட்டசபை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பில் 'ரீல்ஸ்'களை தடுக்க வருகிறது மாற்றம்
-
தென் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தினகரன் ரகசிய பேச்சு; பழனிசாமி மவுனம்
-
கரப்பான்பூச்சி கட்சி போராட்டத்துக்கு பின் 'இன்ஸ்டா'வில் களமாடும் அரசியல் தலைவர்கள்
-
சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்: தென்னிந்திய புல்லியன் அசோசியேசன் டிப்ஸ்
-
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு; அச்சம் வேண்டாம் என அரசு அறிவிப்பு