டி.ஆர்.டி.ஓ., ஏவுகணை தொழில்நுட்பங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் பெறலாம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி
புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ., எனும் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய தொழில்நுட்பங்களை, உள்நாட்டு ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள், உள்நாட்டில் ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக, பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் கூறியுள்ளதாவது: டி.ஆர்.டி.ஓ., அமைப்பு உருவாக்கிய அனைத்து வழக்கமான ஏவுகணை அமைப்புகளின் தொழில்நுட்பங்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியாவில் உள்ள ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க, அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் வாயிலாக, உள்நாட்டு ஏவுகணை உற்பத்தியை விரைவுபடுத்துவதுடன், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களின் ராணுவ தளவாட உற்பத்தி பங்களிப்பை பாதுகாப்புத் துறை வினியோக தொடரில் அதிகரிக்க முடியும்.
தொழில்நுட்பத்தை பெற தகுதியுள்ள இந்திய நிறுவனங்கள், தேவையான தகுதிகள், சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, டி.ஆர்.டி.ஓ., உருவாக்கிய வழக்கமான ஏவுகணை தொழில்நுட்பங்களை பெற்று உற்பத்தியில் ஈடுபடலாம். பாதுகாப்பு துறையில் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முயற்சியில் இது முக்கிய நடவடிக்கை ஆகும்.
ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்துவது என்ற நிலையிலிருந்து தொழில்துறை அளவிலான உற்பத்திக்கு கொண்டு செல்லவும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறை கட்டமைப்பை வலுப்படுத்தவும் இது உதவும். உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரித்தல், பாதுகாப்புத் துறை கட்டமைப்பை வலுப்படுத்துதல், இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்பு உற்பத்தி தொடரில் பங்கேற்க வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
ஜூலை மாதம் வெளியான சி.ஏ.பி.எஸ்.எஸ்., எனும் மத்திய விண்வெளி சக்தி மற்றும் வியூக ஆய்வு மையத்தின் ஆய்வில், குறிப்பாக சீனாவுடனான ஒத்துழைப்பு வாயிலாக பாகிஸ்தானின் விண்வெளி திறன்கள் வேகமாக வளர்ந்து வருவது சுட்டிக்காட்டப்பட்டது. செயற்கைக்கோள் அடிப்படையிலான உளவுத்தகவல், வழிகாட்டுதல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை நவீன ராணுவ நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்று வருவதால், பாகிஸ்தானின் விண்வெளி திறன் விரிவாக்கம் இந்தியாவின் பாதுகாப்பு உத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறனை அதிகரிக்கவும், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கும் உதவும். இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
@block_B@ ரூ.3 லட்சம் கோடி இலக்கு
*2024 - 25ம் நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.54 லட்சம் கோடி.
* பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடி. இது, சாதனை அளவாகும்.
*நடப்பு நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி இலக்கு ரூ.1.75 லட்சம் கோடி.
*வரும் 2029ம் ஆண்டுக்குள் அதை ரூ.3 லட்சம் கோடி உயர்த்த இலக்குblock_B
டி.ஆர்.டி.ஓ., ஏவுகணை தொழில்நுட்பங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் பெற முடிந்தால் , அவை முறையற்ற வழியில் வேற்று நாடுகளுக்கு தடம் மாறாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அரசின் தீவிரமான கண்காணிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். இத்தகைய அனுமதிப்பால், DRDO உடனடியாக சந்தித்த பிரச்சனை, திறமையான தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு நீங்கியது போன்றவை.
நல்ல முடிவு. பலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டுக்கு போகும் மனித வளம் உள்நாட்டிலேயே வேலை தேடலாம்.
அதானி அம்பானிக்கு தாரை வார்க்கிறார்கள் என்று ஒரு கும்பல் பொங்கிடுவாங்களே ..மேலும்
-
கர்நாடகாவில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும்: சொல்கிறார் முதல்வர் சிவகுமார்
-
மாவட்ட அளவிலான செஸ் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
-
குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தர்மநல்லுார் ஆதிதிராவிடர் நலப்பள்ளி சாதனை
-
விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி முடிவது எப்போது? தேத்தாம்பட்டு கிராம இளைஞர்கள் எதிர்பார்ப்பு
-
இன்றைய நிகழ்ச்சி
-
பன்றி காய்ச்சல்: மாவட்டத்தில் பண்ணைகளில் ஆய்வு