'மூலப்பொருட்கள் விலை உயர்வால் டயர் நிறுவனங்கள் லாபம் சரிவு'
புதுடில்லி: மூலப்பொருட்களின் விலை உயர்வால், இந்திய டயர் உற்பத்தி நிறுவனங்களின் லாபம் நடப்பு நிதியாண்டில், 12 சதவீதம் வரை குறையும் என, கிரிசில் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், டயர் நிறுவனங்களின் லாபம், 14.20 சதவீதமாக இருந்தது.
இந்த லாபம் குறைவதற்கு, மூலப்பொருட்களின் விலை, 35 முதல் 40 சதவீதம் உயர்ந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
டயர் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில், இயற்கை ரப்பரின் பங்கு 50 சதவீதமா க உள்ளது. ஒரு கிலோ இயற்கை ரப்பர் விலை, 55 ரூபாய் அதிகரித்து, 275 ரூபாயாக உயர் ந்துள்ளது.
மேற்கு ஆசிய போர், கப்பல் போக்குவரத்து பிரச்னைகள் ஆகியவை, ரப்பர், நைலான் டயர் கார்டு மற்றும் கார்பன் பிளாக் மூலப்பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக, டயர் விலை, படிப்படியாக உயர்த்தப்படுகிறது. 2028ம் நிதியாண்டில், மூலப்பொருட்களின் விலை நிலையாகவும், லாபம் 13.50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், டயர் விற்பனை 8 சதவீதத்தில் குறைந்து, 4 முதல் 5 சதவீதமாகவும், ஏற்றுமதி 3 முதல் 4 சதவீதமாகவும் உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
-
கேரள பாரம்பரிய உடையில் வந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள்; வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் ஓணம் பண்டிகை கோலாகலம்
-
பி.எம்.டபுள்யூ., 'எக்ஸ் - 1 லாங் வீல் பேஸ்' நீளம், உயரம், பூட், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பு