மத்திய அமைச்சர் கட்கரி அரசியலில் இருந்து ஓய்வு?
நாக்பூர்: ''என்னால் முன்பு போல அதிகமாக வேலை செய்ய முடியவில்லை. பொறுப்புகளை இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, 69, தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
இப்போதெல்லாம் என்னால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. என்னால் முடிந்த போது கடுமையாக உழைத்தேன். தற்போது என் ஈடுபாடு குறைந்துள்ளது. பொறுப்புகளை இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது.
இளம் தலைமுறையினருக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பொது வாழ்க்கையில், 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். பல ஏற்றத்தாழ்வுகளை கண்டுள்ளேன்; பல விருதுகளை பெற்றுள்ளேன். ஆனால் தற்போது, என்னால் அதிகம் பணியாற்ற முடியவில்லை.
இளம் தலைமுறையினர் செயல்பட வாய்ப்பு அளிக்க வேண்டும். மஹாராஷ்டிராவில் மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமம் எதுவும் இருக்கக்கூடாது. மாநிலம் முழுதும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதே என் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சு, அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமும் நடந்தது.
இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகம், 'நிதின் கட்கரியின் கருத்துக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தன் அறக்கட்டளை பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றே அவர் கூறினார்.
'அந்தப் பணிகளை இளம்தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார்' என, தெளிவுபடுத்தியது.
பா.ஜ., தேசிய தலைவராக, கடந்த ஜனவரியில் நிதின் நபின் பொறுப்பேற்றது முதல், இளம் தலைமுறையினருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சமீபத்தில் கட்சியில் தேசிய அளவில் நியமிக்கப்பட்ட, 76 நிர்வாகிகளின் சராசரி வயது, 55. இந்த சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த கருத்து பேசுபொருளாகி உள்ளது.
அடுத்த ஜெகதீப் தன்கர் ரெடி ஆகிறாரோ
முதலில் டோல் கட்டண கொள்ளையை நிறுத்துங்கள். 10 வருடங்கள் கழித்து பின்பும் அதிகம் வசூல் செய்கின்றனர்
Ghadkari Sir. You were very sincere to the Government and your department during your tenure as minister of Highways. All the Best and Greetings for your retired life.
பதவி சுகத்திற்காக இறக்கும் வரை பதவி தொடர வேண்டும் என உள்ள அரசியல் வாதிகளுக்கு மத்தியில் இப்படி ஒருவர்.
பெரிய ஜி அமித் சேட்டுல்லாம் புள்ளபூச்சி மாதிரி நினைக்க வச்சி நாட்டு மக்களுக்கு அதிகம் நேரடி கொடுமைகள் செய்தவர் இவர். ஒரு காலத்தில் இவர் பிரதமராக வரனும்னு சொல்லியிருக்கேன். இப்போ ஓடிப்போகட்டும்னு தோனுது. பாஞ்சு வரப்போற அப்ரசண்டிக நாமளும் இந்தாளோட அநியாய டோல் கொள்ளை மற்றும் எத்தனால் கொள்ளையால் பாதிக்கப்படுகிறோம்னு புரிஞ்சிக்கும் மன நிலையில் இருப்பாங்களான்னு தெர்ல... தொலையட்டும் இந்த பொய்யர்
வேகாத பகோடா பாமரன் கதறல் அருமை
பொறுப்புகளை இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது, - தன்னோட மகனை பாஜக களத்தில் இறக்க போகிறாராம்.
விருமாண்டியை நன்றாக வளர்க்க இல்லையே
மஹாராஷ்டிராவில் மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமம் எதுவும் இருக்கக்கூடாது. - தப்பா அர்த்தம் புரிஞ்சுண்டு கிராமத்தை இல்லாம ஆக்கீருவானுங்க இந்த சங்கித வித்வான்கள்.
டேய் எருமாண்டி உண்டியல் குலுக்கி கும்பலில் நீயும் ஒருவனா? உனக்கு எதற்கடா இந்த வேலை ?
ஒய்வு என்பது முடக்குவதற்கு முன்னால் அல்ல - அதற்கென்று ஒரு காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிதின் கட்கரியின் மகன்கள் அரசியலில் ஈடுபட இவர் போடும் கணக்காக இருக்கலாம் .. ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னராகலாம்மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'