வேப்பூரில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் மக்கள் கடும் வாக்குவாதம்: அடுக்கடுக்கான புகார்களால் அதிகாரிகள் அச்சம்
வேப்பூர்; வேப்பூர் தாலுகாவில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடுக்கடுக்காக கூறிய புகாரால் அதிகாரிகள் அச்சமடைந்தனர்.
வேப்பூர் தாலுகா கிராமங்களில் ஊரக வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், கூட்டுறவு உட்பட அனைத்துத்துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இதனை, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் குழுவினருடன் நேற்று ஒருநாள் முழுவதும் வேப்பூர் பகுதியில் ஆய்வு செய்தார்.
அதில், வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சியில் அங்கன்வாடி மையம், நிராமணியில் பாலம், சேப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் உறுப்பினர்கள் கல்வி திட்டம் மற்றும் சந்திப்பு முகாம், ரூ.16 லட்சத்தில் சிறுதானியம் பதனிடும் அலகு, வேப்பூரில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் பேப்பர் பிளேட் மற்றும் பாக்கு தட்டு தயாரிப்பு மையங்க ளை பார்வையிட்டார்.
அப்போது, திட்ட பயனாளிகள் விபரம், மாணவர்களின் கல்வி தரம், பேப்பர் பிளேட் மற்றும் பாக்கு தட்டு தயாரிப்பு முறை, சிறுதானியம் பதனிடும் இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தனிநபர் கோரிக்கை மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது.
கலெக்டரிடம் வாக்குவாதம் கண்டப்பங்குறிச்சி அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்ய காலை 10 மணிக்கு கலெக்டர் சென்றார். அப்போது, அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, உங்கள் கோரிக்கைகளை பொறுமையாக கூறுங்கள் என கூறியதும், குடிநீர் தட்டுப்பாடு, தெரு மின் விளக்குகள் இல்லை, கழிவுநீர் தேக்கம், நூறுநாள் வேலை வழங்கவில்லை என கிராம அடுக்கடுக்காக புகார் கூறினர். அவர்களிடம், உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கலெக்டர் கிராம மக்களை சமரசம் செய்தார்.
கலெக்டர் வருகை அறிந்து வந்த திருப்பயர் ஊராட்சி மக்கள் சிலர், தங்கள் கிராம ஊராட்சி செயலர் பல்வேறு முறைகேடு ஈடுபடுவதாக கூறி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அதனையேற்று காலை 10:45 மணியக்கு திருப்பயர் ஊராட்சிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டரை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு தனிநபர் வீடு கட்டியும் திட்டத்தொகை வழங்கவில்லை, சுகாதார மற்ற இடத்தில் மினி டேங்க் கட்டியது, இடியும் நிலையில் உள்ள பாலம், கழிவுநீர் வடிகால் அடைப்பு, ஏரி ஆக்கிரமிப்பு என புகார்களை அடுக்கினர். உங்களின் கோரிக்கைகள் குறித்துள்ளேன். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பர் என சமரசம் செய்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதிகாரிகள் அச்சம் 'உங்கள் தேடி உங்கள் ஊரில்' திட்டம் குறித்தும், இத்திட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய் வு செய்ய வருவது குறித்து பெரும்பாலான கிராம மக்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், தங்கள் மீது புகார் ஏதும் வராது என அதிகாரிகள் நினைத்த நிலையில், எதிர்பாராத விதமாக கிராம மக்கள் திரண்டு அடுக்கடுக்காக கூறிய புகார்கள் மற்றும் மனுக்களால் அதிகா ரிகள் அச்சமடைந்துள்ளனர்.
@block_B@ தரையில் அமர்ந்திருந்த மக்கள் வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. நூறுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அதில், மனு கொடுக்க வருபவர்களுக்கு 20 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டது. மற்றவர்களுக்கு இருக்கைகள் இன்றி தரையில் அமர்ந்திருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.block_B
மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'