பாகிஸ்தானில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி
இஸ்லமாபாத்: பாகிஸ்தான் உள்ள மருத்துவமனையில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைநகர் இஸ்லமாபாத்தில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், பிரசவ வார்டில் உள்ள ஏசி கம்ப்ரசர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீ, அறையின் மற்ற பகுதிகளுக்கு உடனடியாக பரவியது. இதனால், தீ மற்றும் நச்சுப்புகை அதிகளவில் வெளியேறியது.
இதில், பிரசவ வார்டில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 16 பச்சிளம் குழந்தைகளில், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டது. எஞ்சிய 15 குழந்தைகள் தீ மற்றும் நச்சுப்புகையினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் உதவி ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழை; சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்
-
கங்கனா ரனாவத் - க்ரீத்தி சனோன் சண்டையில் புகுந்த ராகுல்
-
விமான நிலையமும் வேணும்... விவசாயமும் வேணும்; சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்
-
மேட்டூர் அணை நாளை மறுநாள் திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
-
மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் ரூ.950 கோடி; ஒரு நாளைக்கு ரூ.2.60 கோடி!
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘ரூ.6,000 முதலீட்டில் துவங்கிய தொழில் இப்போது ரூ.30 லட்சத்தில் நடக்கிறது!’ –––––––––––––––