வீரையன் குட்டையை துார்வார வேண்டுகோள்

திருவாலங்காடு: ராஜபத்மாபுரம் பகுதியில் உள்ள வீரையன் குட்டையை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம், ராஜபத்மாபுரம் கிராமத்தில், 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீரையன் குட்டை உள்ளது.

பல ஆண்டுகளாக, இந்த குட்டை பராமரிப்பு இன்றி துார்ந்துள்ளது. இதனால், கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆகையால், வீரையன் குட்டையை துார்வாரி சீரமைத்து, குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement