தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்: தென்னிந்திய புல்லியன் அசோசியேசன் டிப்ஸ்
கோவை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசுக்கு உள்ள சவால் குறித்து தென்னிந்திய புல்லியன் அசோசியேசன் விளக்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூல்லர்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 0.01 செய்கூலி சேதாரத்தில் மோதிரம் தயாரிப்போம் என கூறி ஒப்பந்தத்தை பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சாத்தியமா, அரசுக்கு உள்ள சவால் குறித்து தென்னிந்திய புல்லியன் அசோசியேசன் தலைவர் சுரபி கார்த்திக் கூறியதாவது:
அரசிடம் நிதி இருந்தால் இது சாத்தியமே. சேதாரம் எதுவும் இல்லை. தங்கத்துக்கு மட்டும் காசு என்றடிப்படையில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 லட்சத்து 40,000 மோதிரம் தருகிறார்கள். 22 கேரட் 916 தரத்தில் தங்கம் கொடுக்கிறார்கள். இதற்கு 400 கிலோ சுத்த தங்கம் தேவை. தற்போது 24 கேரட் கிராம் ரூ.16,100 ஆக உள்ளது. 22 கேரட் ஒரு கிராம் ரூ.14,700 ஆக உள்ளது. ரேட் ஏறாமல், அடுத்த 5 ஆண்டு இதே நிலை தொடர்ந்தால் ரூ.650 கோடி பட்ஜெட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த பிப்ரவரி மாதம் 24 கேரட் ஒரு கிராம் ரூ.19,000க்கு சென்றது.
அப்படி சென்றால் ரூ.750 கோடி கூட ஆகலாம். கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் விலை இரண்டு மடங்கு ஏறியது. அப்படி விலை ஏறினால் கஷ்டம். அரசுக்கு ரிஸ்க் உள்ளது. வெளிநாடுகளில் அரசு ஒரு திட்டம் துவங்கும்போது, தேவையான மூலப்பொருள்களை உடனடியாக மொத்தமாக கொள்முதல் செய்வார்கள்.
ஒப்பிட முடியாது
பணவீக்கம், டாலர் மதிப்பு உயர்வில் சிக்கினால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்படும். எனவே திட்டமிட்ட நிதியில் இப்போதே தங்கம் வாங்கி முதலீடு செய்துவிட்டால் அரசு ரேட் ரிஸ்கில் தப்பிக்கலாம். உற்பத்தியாளர்களுக்கு ரிஸ்க் இல்லை. மத்திய அரசிடம் பேசி தங்கத்தை முன்பதிவு செய்யலாம்.
தங்கநகை உற்பத்தியாளர் சங்கங்களிடம் பேசினால் உரிய ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டால் விலை ஏறினாலும் கவலை இல்லை. டெண்டரில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும் சிறந்த பட்ஜெட்டில் கொடுத்தனர். ஜோய் ஆலுக்காஸ் லாபம் இல்லாமல் தயாரிப்பு செலவை அவர்களே ஏற்பதாக கூறியுள்ளனர்.
சேதாரம், தயாரிப்பு செலவு, போக்குவரத்து, ஹால் மார்க்கிங் எல்லாவற்றையும் கணக்கிட்டு தான் இந்த விலையை கொடுத்தனர். ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இதை சி.எஸ்.ஆர் நிதியில் கூட கணக்கு காட்டலாம். அவர்களுக்கு கிடைத்திருக்கும் பிராண்டிங் பெரிது. சேதாரம் இல்லாமல் யாரால் தயாரிக்க முடியும் என அரசு கேட்டிருந்தால் நிறைய நிறுவனங்கள் வந்திருக்கும்.
குலுக்கல் முறையில் பணி கொடுக்கும் நிலை வந்திருக்கும். டெண்டரை அடுத்தமுறை அரசு பிரித்து கொடுத்தால் உள்ளூர் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அரசின் நல்ல காரியத்துக்கு அனைவரும் பங்களித்த மாதிரி இருக்கும். கோவை மேக், சென்னை மேக், மதுரை மேக், விழுப்புரம் மேக் என பல வித மோதிரங்களும் உற்பத்தி செய்ய முடியும்.
தாலி, மோதிரம் தயாரிப்பு செலவு வேறுபடும். தாலிக்கு ஒரு கிராம் தயாரிப்பதற்கு ரூ.600 செலவாகும். மோதிரத்துக்கு அதிக கொள்முதல் செய்வதால் ஒரு கிராம் தயாரிப்பு செலவு ரூ.170 ஆகும். தாலி தயாரிப்புக்கான ஆசாரிகளும் குறைவு. மோதிரம் தயாரிப்புக்கு அதிக ஆசாரிகள் உள்ளனர்.
தாலிக்கு தங்கம் திட்டத்துடன் இதை ஒப்பிட முடியாது.ஏழை நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகிவிட்டது. அவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனளிக்கும். 2021ம் ஆண்டில் இருந்து தங்கத்தின் தரம் மேம்பட்டுள்ளது. விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை. ஒரு கிராம் மோதிரத்தில் ஹால்மார்க் முத்திரை இருக்கும். அதை ட்ராக் செய்தால் நகை உற்பத்தி யார் செய்தது, தரம், ஆண்டு என ஜாதகமே இருக்கும். நுகர்வோர் தங்கம், வெள்ளி வாங்கும்போது பயப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட கட்சி ஆட்சியில் சாத்தியமில்லை
கடந்த ஆட்சிகளில் டெண்டரில் கலந்து கொள்வதற்கே 5 முதல் 10 சதவீதம் பார்டி பண்ட் தரவேண்டும். அந்த நிலை இருந்திருந்தால் 1 பைசாவுக்கு செய்வதற்கு எல்லாம் யாரும் வந்திருக்க மாட்டார்கள். இப்போது சட்டசபையிலேயே பார்டி பண்ட் பேசுகிறார்கள். எல்லாமே வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
மனமும், எண்ணமும் ஊழல் கூடாது என்கிற நேர்கோட்டில் பயணித்தால் இதை எளிதாக செய்யலாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் மோதிரம் தயாரிக்கிறார்கள் என்றால் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 15 நாட்களில் மோதிரம் தயாரிக்க முடியும். அரசு நேர்மையுடன் வலிமையானதாகவும் இருக்க வேண்டும்என்கிறார் கார்த்திக்.
கடந்த காலங்களில் அரசு நிர்வாகம் ஊழலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு இருந்தால், ₹10 லட்சம் கோடி கடன் அரசுக்கு ஏற்பட்டு இருக்காது என்பது உண்மை. எனினும், இன்றளவும் அரசின் பல்வேறு துறைகளும் ஊழலில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை என்பதையும் கூறியே ஆக வேண்டும்.
இங்கு கூலி, சேதாரம் என்பதெல்லாம் நகைக் கடைக் காரர்களின் ஹம்பக் வேலை. மலேசியா போன்ற நாடுகளில் நகைக் கடைகளில் இன்றும் கூலி, சேதாரம் இன்றி அன்றைய விலைக்கு அப்படியே எடையிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இல்லை. அங்கும் 3-5 சதவீதம் செய்கூலி வாங்கப்படுகிறதுமேலும்
-
காரியாபட்டி அரசு பெண்கள் பள்ளியில் ரோட்டோரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்
-
இரவில் பஸ் வசதியின்றி கூடலுார் மக்கள் அவதி
-
திருப்பாலைக்குடியில் கடற்கரை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
-
சிவகங்கை, ராமநாதபுரத்தில் பால் உற்பத்தி பாதிப்பு பூட்டிக் கிடக்கும் பால்பண்ணை
-
கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
-
விழிப்புணர்வு ஊர்வலம்