சட்டசபை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பில் 'ரீல்ஸ்'களை தடுக்க வருகிறது மாற்றம்
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது சில நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் முடிந்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. துறைவாரியாக நடக்கும் மானிய கோரிக்கை விவாதங்களில், எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
சபை காலை 9:30 மணிக்கு துவங்கி மாலை முடியும் வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை பல்வேறு 'யு டியூப் சேனல்'கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன. இவற்றை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய வார்த்தைகளை சபைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குவதாக அறிவிக்கிறார். ஆனால் அவை நேரடி ஒளிபரப்பில் மட்டுமின்றி, 'ரீல்ஸ்' ஆக வெளியிடப்பட்டு விடுகின்றன. இதனால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சபாநாயகர் நீக்கும் வார்த்தைகளை நேரடி ஒளிபரப்பில் இடம்பெறாமல் செய்ய வேண்டும் என தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சபை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. நடப்பு வாரத்திலேயே, இந்த நடவடிக்கை செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக சட்டசபை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
@block_B@
தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், காலை 9:30 மணிக்கு துவங்கும் சட்டசபை, பிற்பகல் 2:00 மணி வரை நடக்கும். அவசியமுள்ள நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் சபை நடக்கும். ஆனால், தற்போது இரவு 7:00 மணியை தாண்டியும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. கடந்த 25ம் தேதி இரவு 7:15 மணி வரை இடைவேளையின்றி, 10 மணி நேரம் சபை கூட்டம் நடந்தது.
இதனால், மூத்த எம்.எல்.ஏ.,க்கள், உடல் நலக் குறைபாடுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பலரும் சோர்ந்து போயினர். இதை நேரடி ஒளிபரப்பில் பார்த்த பொது மக்களும், 'கின்னஸ் சாதனைக்கு சட்டசபை கூட்டம் நடத்தப்படுகிறதா' என விமர்சித்தனர்.block_B
ரீல்ஸ் இருக்கவேண்டும் . எந்த உறுப்பினர் என்ன பேசுகிறார் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அறியும் உரிமை வேண்டும்.
ஒரு தரப்பை மறுதரப்பு குறை சொல்வது, அடிக்கப்பாய்வது, சினிமாப்பாட்டு பாடுவது, கட்சித் தலைமையை கூச்சமின்றிப் புகழ்வது, அநாகரீகப்பேச்சு, வெட்டிப்பெச்சு .... இவைதான் அவையில் நடக்கின்றன .....
நேரடி ஒளிபரப்பு கட்டாயம் செய்ய வேண்டும். திமுகவினர் திமிர்தனம் மக்களை சென்றடையும். திமுகவின் ஓட்டு வங்கி வீழ்ச்சி அடையும்
இவர்கள் எல்லாம் வீட்டில் ஒய்வு எடுக்கவேண்டியது ..மக்கள் வரி பணத்தை வீணடிக்கிறார்கள்.
இந்த ஈரவெங்காய விளக்க புண்ணாக்கிற்கு பதில் நேரடி ஒளிபரப்பு இல்லாமலே இருந்திருக்கலாம்.
பி டீம் எஜமானரின் கட்டளைக்குப் பணிந்து சரண்டர் ஆயிட்டுது ......
தங்கம் தென்னரசு, கே.என்.நேரு போன்ற ஒரு சில உறுப்பினர்களைத் தவிர சபையில் எதிர்வாதம் செய்வதில் மற்ற தி.மு.கவினரின், குறிப்பாக உதயநிதியின் செயல்பாடுகள் சுத்த வேஸ்ட். இந்த வீக்னஸ் மக்களிடம் நேரடியாக சென்றடைவதைத் தடுக்கவே நேரடி ஒளிபரப்பை தி.மு.க மட்டுமே எதிர்க்கிறது.
மக்களுக்கு சேவை என்று வயதானாலும் ஓட்டு கேட்கும் போது தெரியாதா. தனக்கு பல பணக்கார நோய்கள் இருப்பது
பல பணக்கார நோய்கள் இருந்தாலும், கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவேண்டும் என்ற பண வெறி பதவி சுகம் வெறி இவர்களை விடவில்லலையே. தள்ளாடும் வயதிலும் எப்படியாவது MLA ஆகி அமைச்சராகிவிட வேண்டும் என்று MGR, ஜெயலலிதா, கருணாநிதி, துரை முருகன் உட்பட அனைவருமே பதவி வெறி பிடித்தவர்கள்தான். மக்கள்தான் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் மாறவேண்டும்.மேலும்
-
டாஸ்மாக் கடைகள் அடைப்புமது பிரியர்கள் -'அப்செட்'
-
குன்னுாரில் மாவட்ட ஹாக்கி போட்டிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
-
தமிழக எல்லைக்குள் வாகனங்கள் வர எதிர்ப்பு அரசியல் கட்சியினர் போலீசாரிடையே கடும் வாக்குவாதம்
-
பாக்., உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட தம்பதி டில்லியில் அதிரடி கைது
-
சிறுபான்மையினர் சார்பு அரசு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
துணி கடையில் தீ