தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு; அச்சம் வேண்டாம் என அரசு அறிவிப்பு
சென்னை: 'மாறிவரும் பருவநிலை மாற்றத்தால், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், பகல் நேரத்தில் கடும் வெயில்; மாலை நேரத்தில் மழைப் பொழிவு இருந்து வருகிறது.
இந்த பருவநிலை மாற்றத்தால், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்றவற்றால், மக்கள் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது.
உரிய பரிசோதனை
டெங்கு மற்றும் இன்ப்ளுயன்ஸா தொற்றால், தினசரி 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு, டெங்கு காய்ச்சலால், 12,543 பேர் பாதிக்கப்பட்டு, நான்கு பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், 'இன்ப்ளுயன்ஸா' வகையை சேர்ந்த பன்றிக்காய்ச்சலுக்கு, கடந்த மூன்று மாதங்களில், 339 பேர் என, இந்த ஆண்டில் மட்டும், 1,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாநிலம் முழுதும் காய்ச்சல், சளி போன்றவற்றால், லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, காய்ச்சல் குறித்து, மக்கள் அச்சப்பட வேண்டாம் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் அறிக்கை:
பருவகால காய்ச்சல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், போதியளவில் இருப்பு உள்ளன.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு, உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பன்றிக்காய்ச்சலுக்கான, 'ஒசல்டாமிவிர்' மருந்து, டாக்டரின் ஆலோசனைப்படி, தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கர்ப்பிணியர், குழந்தைகள், முதியோர், இணை நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர். கடுமையான நோய் இருப்போருக்கு, ஆய்வகப் பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல், சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
எனவே, 'எச்1 என்1' எனப்படும் பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இது, சிகிச்சை அளிக்கக் கூடிய நோய். காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால், ஆரம்ப நிலையில் மருத்துவமனைக்கு வர வேண்டும்.
பொதுமக்கள் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின்போது, சுகாதாரத்தை கடைப்பிடித்தல், போதிய ஓய்வு, திரவ உணவு உட்கொள்ளுதல் போன்ற, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் ஆரம்ப நிலையில், மருத்துவமனைக்கு செல்வதன் வாயிலாக, தீவிர பாதிப்பை தவிர்க்க முடியும். தற்போது பருவகால காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும், நிலைமை முழுமையாக கட்டிப்பாட்டில் உள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பன்றிகாய்ச்சலோ அல்லது வேறு எந்த VIRUS ATTACK வந்தாலும் - 2-3 நாட்கள் வெந்நீர் குடித்து உண்ணாவிரதம் இருந்தால் VIRUS தானாகவே மடியும்.
முழு உண்ணாவிரதம் இருக்கமுடியாதவர்கள் - ஆரஞ்சு JUICE ம் இளநீரும் குடிக்கலாம்.
HOSPITAL, DIAGNOSIS , மருந்துமாத்திரை , INJECTION , ICU என்று அலைய ஆரம்பித்தால் SITUATION இன்னும் தீவிரம் ஆகும்.
“लंघनं परम् औषधं” - உண்ணாவிரதம் எல்லா வியாதிகளுக்கும் மருந்து - என்று நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்தனர். அது இன்றும் உண்மை - எதிர்காலங்களிலும் அதுதான் ஒரே தீர்வு.
சரியாச் சொன்னீங்க சாமி .....
மூர்க்கக்காட்டேரிகளின் வளர்ச்சி, உரிமைகள், சுதந்திரம் காரணமோ >>
365 நாட்களில் ஏதாவது பிரச்னை இருந்து கொண்டு அவதிப்படுகிறீர்களா .. சுகாதாரமான காற்று குடிநீர் கிடையாது …மேலும்
-
கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
-
இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு