ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

தர்மபுரி: தர்மபுரி டவுனிலுள்ள, கேரள மக்களின் வீடுகளில், ஓணம் பண்டி-கையை முன்னிட்டு, பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டா-டினர்.


கேரளம் மாநில மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகம் முழு-வதும் கேரள மாநில மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி டவுன் பகுதி-யிலுள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை கொண்டா-டப்பட்டது. பண்டிகையையொட்டி கேரள மக்கள் புத்தாடை அணிந்து, அவரவர் வீடுகளில் சுவாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனர். மேலும், அவரவர் வீடுகளில் பெண்கள், வண்ண வண்ண பூக்-களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விருந்தளித்து, வாழ்த்து பரிமாறி கொண்டனர். இதேபோன்று, மாவட்டம் முழுவதுமுள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Advertisement