கால்வாய் அமைக்கும் பணி தாமதம்: யானைக்கவுனி சாலையில் நெரிசல்
சென்னை: பேசின்பாலம் - யானைக்கவுனி சாலையில், 100 மீட்டர் கால்வாய் அமைக்கும் பணி இரண்டு மாதங்களாக நடப்பதால், பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வடசென்னையின் பிரதான சாலையாக, பேசின்பாலம் - யானைக்கவுனி சாலை உள்ளது.
பேசின்பாலம் ஜி.என்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், சென்ட்ரல், மாநகராட்சி ரிப்பன் மாளிகை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல, இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பேசின்பாலம் - யானைக்கவுனி சாலையில், கே.பி.கார்டன், சுந்தரபுரம் அருகே, 100 மீட்டரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி இரண்டு மாதங்களாக நடக்கிறது.
இதனால், சாலையில் ஒருபகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனால், சாலை குறுகியுள்ள நிலையில், எதிரெதிரே வரும் வாகனங்களால், திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், காலை அலுவலகத்திற்கு செல்வோரும், மாலையில் வீடு திரும்புவோரும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதனால், ஏற்படும் நெரிசல், யானைக்கவுனி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை நீள்வதால், அப்பகுதியிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு, போக்குவரத்து போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆமை வேகத்தில் மழைநீர் கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன.
ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக மாநகராட்சி மண்டல அதிகாரிகள் செயல்படுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும்
-
கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
-
இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு