வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்களுக்கு 'ராம்சார்' திட்டத்தின்கீழ் எல்லை வரையறை
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களுக்கு, மத்திய அரசு, 'ராம்சார்' குறியீடு வழங்கி, எல்லை வரையறை செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வனத்துறை சார்பில், 1936ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 1989ல், கரிக்கிலி பகுதியும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
குளிர் காலம் தொடங்கும் செப்டம்பர் கடைசி வாரத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பறவைகளின் வருகை தொடங்கும். டிச., முதல் பிப்., வரை பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதன்படி, 30 வகையான, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் வரும். படிப்படியாக மே மாத கடைசி வாரத்தில், பறவைகள் சொந்த இடங்களுக்கு பறந்து விடும்.
இந்நிலையில், வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தை சுற்றி, 5 கி.மீ., சுற்றளவு பகுதிகள், ராம்சார் எனும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, மத்திய அரசு எல்லை வரையறை செய்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
எல்லை வரையறை காரணமாக, சரணாலயத்தை சுற்றி, 5 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ள வனத்துறை அனுமதி பெற வேண்டும்.
எல்லைக்குள் உள்ள கிராம ஏரிகள், நீர்நிலைகள் வனத்துறை அனுமதியின்றி துார்வாரக்கூடாது.
இயற்கை, சுற்றுச்சூழலோடு இப்பகுதியை வைத்துக்கொள்ள விவசாயிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இரு சரணாலயங்களை மேம்படுத்தினால் சுற்றுலா மேம்படும். இதனால், இங்குள்ள மக்களுக்கு சிறிய கடைகள், உணவகங்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பெண்கள் மேம்பாட்டிற்கு வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களை சுற்றி மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்த, 20 கிராமங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவை சேர்ந்த, 18 கிராமங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலப்பகுதிகள், பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலப்பரப்பாக அறிவிக்கப்பட்டும், இதுவரை எல்லை வரையறை செய்யப்படாமல் உள்ளது.
எல்லை வரையறை செய்ய தடையாக உள்ள அரசியல் வியாதிகளை நைய்ய புடையுங்கள். எல்லாம் சரியாகி விடும்.மேலும்
-
காரியாபட்டி அரசு பெண்கள் பள்ளியில் ரோட்டோரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்
-
இரவில் பஸ் வசதியின்றி கூடலுார் மக்கள் அவதி
-
திருப்பாலைக்குடியில் கடற்கரை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
-
சிவகங்கை, ராமநாதபுரத்தில் பால் உற்பத்தி பாதிப்பு பூட்டிக் கிடக்கும் பால்பண்ணை
-
கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
-
விழிப்புணர்வு ஊர்வலம்