8 அமைச்சர்கள், 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் களமிறக்கம்! வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை தப்புமா?
சென்னை: 'வடகிழக்கு பருவமழையால், தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் சூழல் கூடாது; அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, சென்னை மாநகராட்சிக்கும், பல்வேறு துறைகளுக்கும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை முடுக்கிவிட, எட்டு அமைச்சர்களும், 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதம் வரை பெய்வது வழக்கம். காலநிலை மாற்றம் காரணமாக, சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்திலும் பருவம் தவறிய மழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை
மழையால், சென்னையில் உள்ள பல்வேறு மண்டலங்கள் பாதிக்கப்படுகின்றன. பல நாட்கள் சென்னை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு அதுபோன்ற சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என, அரசு கருதுகிறது. அதற்கேற்ப, பணிகளை முடுக்கிவிடும்படி, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும்படி, மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மழைநீர் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த வசதியாக, மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்களில், மாநகராட்சி கமிஷனர் சமீரனுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள வெள்ள அபாய பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.
மருத்துவம், பணியாளர்கள் ஒருங்கிணைப்பு, மக்களை தங்கவைப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தலைமை செயலர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கண்காணிப்பு
இதுதவிர, வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு, பொறுப்பு அமைச்சர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இப்பணியை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு, மூன்று மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் என, ஏழு அமைச்சர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
@block_B@ அமைச்சர்கள் மண்டலங்கள்
ஆதவ் அர்ஜுனா ஒருங்கிணைப்பு பணி விஜய் பாலாஜி அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை ரமேஷ் திருவொற்றியூர், மணலி பிரபு கோடம்பாக்கம், வளசரவாக்கம் லோகேஷ் தமிழ்செல்வன் தண்டையார்பேட்டை, மாதவரம் விஜய் தமிழன் பார்த்திபன் ஆலந்துார், அடையாறு அருண்ராஜ் ராயபுரம், திரு.வி.க., நகர் விக்னேஷ் பெருங்குடி, சோழிங்கநல்லுார்block_B
@block_B@ மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
மண்டலம் அதிகாரி பெயர் மொபைல் போன் எண் திருவொற்றியூர் பாலசுப்பிரமணியம் 94894 57640 மணலி குமாரவேல் பாண்டியன் 91502 38111 மாதவரம் அருண்ராஜ் 80727 17935 தண்டையார்பேட்டை கண்ணன் 94450 01100, 94442 69866 ராயபுரம் ஆஷா அஜித் 94899 89411 திரு.வி.க.,நகர் கணேசன் 98421 85758 அம்பத்துார் விவேகானந்தன் 94449 49299 அண்ணாநகர் காயத்ரி கிருஷ்ணன் 73388 50002 தேனாம்பேட்டை கிறிஸ்துராஜ் 99400 22220 கோடம்பாக்கம் கோபால சுந்தரராஜ் 99403 72055 வளசரவாக்கம் விஜயராணி 77083 27726 ஆலந்துார் வாகே சங்கீத் பல்வந்த் 93700 34756 அடையாறு செந்தில்ராஜ் 73977 70020 பெருங்குடி மகேஷ்வரி ரவிக்குமார் 9445905860 சோழிங்கநல்லுார் பாஸ்கர பாண்டியன் 91592 24917block_B
அந்த 23 பேரையும், இப்பொழுதே நேபாளத்திற்கு அனுப்பி, அங்கே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டெடுக்கும் பணியில், ஒருங்கிணைப்பிற்கு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். 2031ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற அது உதவும்.
நீர் வழிகள் எல்லாம் அடைச்சக்கற மாதிரி பாத்துக்கணும். அப்போதான் புதுசா மோட்டார், பம்பு வாங்கி கமிஷன் பாக்க முடியும். பழைய மோட்டாரெல்லாம் இப்போ வேலை செய்யாது. இல்லே வித்து காசாக்கி இருப்பாங்க.
சரியான திட்டமிடல் இல்லாமலும், விரிவாக்கம் என்ற பெயரில் நீர்நிலைகள் பெரும்பாலானவற்றை ஆக்கிரமித்து கட்டிடங்களையும் கட்டி, எத்தனை கோடிகள் செலவழித்தாலும், எந்த ஆட்சி வந்தாலும், தண்ணீர் இறைக்கும் பம்ப்களை வாடகைக்கு எடுத்து இந்த தெருவிலிருந்து மழைநீரை அடுத்தத்தெருவிற்கு வெளியேற்றும் சென்னையின் மழைக்கால அவலங்கள் மாறப்போவதில்லை.
What about Vellachery, the perennial problem area - Who is in ge?மேலும்
-
ஆபரணத் தங்கத்தின் விலை 2 நாளில் ரூ.2,880 குறைவு
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட என்ன காரணம்; செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்
-
கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
-
இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்