ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு; செலவு வரம்பு கட்டுப்பாடுகளால் சிக்கல்
மதுரை: ஊராட்சிகளில் செலவு வரம்பு கட்டுப்பாடுகளால்குடிநீர், தெருவிளக்கு போன்ற அவசிய பணிகளைஉடனுக்குடன் செய்ய முடியாமல், பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாவதாக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடைசியாக உருவான தென்காசி உட்பட, 9 மாவட்டங்களில்மட்டும் ஊராட்சி நிர்வாகங்கள் செயல்படுகின்றன. மீதி, 29 மாவட்டங்களில் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு அலுவலர்கள் (பி.டி.ஓ.,) நிர்வாகத்தில் உள்ளன. இங்கு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பை தாமதமின்றி நிறைவேற்றுவது கட்டாயம்.
ஊராட்சி தலைவர்கள் இருந்தபோது, 5 லட்சம் ரூபாய் வரை செலவுக்கு அவரே பணம் எடுக்க முடிந்தது. ஆனால், சிறப்பு அலுவலர்கள் ஓராண்டில் ஒருமுறை மின்மோட்டார் பராமரிப்புக்கு, 10,000க்குள்தான் செலவிட முடியும்.
தெருவிளக்கு பராமரிப்பை பொறுத்தவரை, ஊராட்சியே தனியார் எலக்ட்ரீஷியன் வாயிலாக பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. முன்பு ஒரு மின்கம்பத்தில் ஏறி இறங்க, 10 ரூபாய் செலவிட்ட நிலையில் இன்று, 100 ரூபாய் செலவாகிறது.
மின்வாரியத்தினர், சீரமைப்பு பணிக்காக மின்சப்ளையை துண்டிப்பதோடு சரி. கம்பத்தில் ஏறி விளக்குகளை பொருத்தும் பணிக தனியார் ஊழியரை அழைக்கின்றனர். இதனால், செலவு அதிகரித்து விடுகிறது.
10,000 ரூபாய்க்கு மேல் செலவாகும் பணிகளுக்கு மதிப்பீடு செய்து, கலெக்டர் அளவுக்கு கொண்டு சென்று, 'இ டெண்டர்' வெளியிட்டு ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு, ஒரு மாத காலமாகிவிடும். இதனால், அவசர பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊராட்சி செயலர்கள், ஓவர்சீயர்கள், ஏ.பி.டி.ஓ.,க்கள், பி.டி.ஓ.,க்கள் தவிக்கின்றனர்.
குடிநீர் தேவை, தெருவிளக்கு பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க இயலாமல், ஊராட்சிகள் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகின்றன.
இதற்கு தீர்வாக குறைந்தபட்ச செலவு வரம்பை, 25,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். சிறுசிறு பணிகளுக்கான டெண்டர்களை சிறப்பு அலுவலர் அளவில் முடிவெடுக்க கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக கடந்தாண்டு வெளியிட்ட அரசாணையை (எண் 238) ரத்து செய்ய வேண்டும். இதன் வாயிலாக பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் அதிருப்தியை போக்கவும் முடியும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.
மேலும்
-
ஆட்கொல்லி புலியை பிடிக்க 160 தானியங்கி கேமராக்கள்
-
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி விரைவு தரிசனம் செய்ய வழிமுறை குறித்து ஆய்வு: அமைச்சர் ரமேஷ்
-
கோவையில் இருந்து 5 பேர் சென்றனரா?
-
பாதாள சாக்கடைக்கு தோண்டிய ரோடு 2 மாதம் ஆன பிறகும் சீரமைக்கவில்லை
-
காலை உணவு திட்டத்துடன் சத்துணவும் சேர்க்கப்படுமா?
-
பாரதியார் பல்கலை.யில் 17 நாட்டு மாணவர்கள்